குவஹாட்டி: ரிலையன்ஸ், ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது அசாமில் இதுவரைக்கும் 3,65,920 க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட் சேவையாக ஜியோவின் ஜியோ பைபர் அல்லது ஏர்ஃபைபர் உள்ளது.
5ஜி-இயங்கும் நிலையான வயர்லெஸ் சேவையான ஜியோ ஏர்ஃபைபர் ஜூன் மாதத்தில் மட்டும் 7,709 புதிய பயனர்களை இணைத்துள்ளது. இதன் மூலம் அசாமில் அதன் மொத்த பயனர் தளத்தை 1,33,279 ஆக உயர்த்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.