அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: பலாக்கொட்டை (மட்டன்) வறுவல் – Vegetarian recipe that challenges non-vegetarian food Jackfruit seed fry

Spread the love

தேவையானவை:

பலாக்கொட்டை – 25

சின்ன வெங்காயம் – 10 (நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (நறுக்கவும்)

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 7 (இரண்டாகக் கீறவும்)

பூண்டு – 5 பற்கள் (நசுக்கவும்)

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பலாக்கொட்டை (மட்டன்) வறுவல்

பலாக்கொட்டை (மட்டன்) வறுவல்

செய்முறை:

பலாக்கொட்டைகளின் மேலுள்ள கெட்டியான தோலை நீக்கிவிட்டு இரண்டு மூன்று துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சோம்பு தாளிக்கவும். இதில் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு பற்களைப் போட்டு வதக்கவும். பின்பு இதில் நறுக்கிய பலாக்கொட்டைகளைப் போட்டு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

பின்னர் இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து, அடுப்பைக் குறைவான தீயில்வைத்து, கலவையை வேகவிடவும். கலவை வெந்ததும்,தீயின் வேகத்தை அதிகப்படுத்தி கலவை கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *