அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி !

dinamani2F2025 06
Spread the love

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் 5 போ் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

இதுதொடா்பான வழக்கில் தனிப் படைக் காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

TN Minister hands over a cheque for Rs. 25 lakh to mother of temple guard who died in police custody.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *