நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார்.
தற்போது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்… எது தெரியுமா?
படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் காரில் வந்து இறங்குவது போன்ற காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. வழக்கமான தோற்றத்தை மாற்றி தலைமுடிக்கு சாயம் அடித்துள்ள அஜித்தின் அந்த விடியோ ரசிகர்களிடம் பெரிதாக வைரலானது.
அதேநேரம், குட் பேட் அக்லியின் அஜித் தோற்ற படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. விரைவில், குட் பேட் அக்லியின் புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.