அஜித்தைச் சந்தித்தாரா மார்கோ இயக்குநர்?

Spread the love

நடிகர் அஜித் குமார் – மார்கோ திரைப்படத்தின் இயக்குநர் கூட்டணியில் படம் உருவாகவுள்ளதாகக் தகவல் வெளியானது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 250 கோடி வரை வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்தபடம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏகே – 64 ஆக உருவாகும் இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் மார்கோ திரைப்படத்தின் இயக்குநர் ஹனீப் அதேனி நடிகர் அஜித் குமாரைச் சந்தித்து கதை சொன்னதாகவும் அஜித் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், அத்தகவல் உண்மையில்லை என்றும் போலியான செய்தி பரவிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ஓஜியால் பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்!

actor ajith kumar and director haneef adeni met news was fake

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *