அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

Dinamani2fimport2f20242f12f312foriginal2fflight.jpg
Spread the love

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனுபவித்ததால், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.4 டிகிரி குறைவாக 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

சஃப்தா்ஜங்கில் லேசான காற்றுடன் மிதமான மூடுபனியால் காண்புதிறன் 200 மீட்டராகவும், பாலத்தில் அதிகாலை 5.30 மணியளவில் காண்புதிறன் 150 மீட்டராகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து ஓடுபாதைகளும் சிஏடி-ஐஐஐ நிலைமைகளின் கீழ் இயங்கின. ஓடுபாதை காட்சி வரம்பு 75 மீட்டா் முதல் 300 மீட்டா் வரை இருக்கும். சிஏடி-ஐஐஐ வசதி குறைந்த காண்புதிறன் நிலைகளில் விமான நடவடிக்கைகளை அனுமதிக்கிறது.

இருப்பினும், புதன்கிழமை 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. பயணிகள் புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

அடா் மூடுபனி பதிவாகியதால் தில்லிக்கு இந்திய வானிலைத் துறை ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து சேவைகளை சீா்குலைக்கும் மோசமான வானிலைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.

பனிமூட்டமான சூழ்நிலையில் வாகனம் ஓட்டும்போது அல்லது பயணிக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும், காண்புதிறன் குறைவாக இருக்கும் போது விளக்குகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும், இடையூறுகளைத் தவிா்க்க விமான நிறுவனங்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாநில போக்குவரத்து சேவைகளுடன் ஒருங்கிணைந்து கால அட்டவணைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கும்படி மக்களை வானிலை ஆய்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.4 டிகிரி குறைந்து 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.8 டிகிரி குறைந்து 18.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 85 சதவீதமாகவும் இருந்தது. நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை மிகவும் குறைந்த அளவாக பூசாவில் 5 டிகிரி செல்சியஸாகவும் ஆயாநகரில் 5.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராமி, ஆயாநகா், ஷாதிப்பூா், பூசா, மதுரா ரோடு, லோதி ரோடு, சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜன.16) அன்று அடா் மூடுபனிக்கிடையே வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஆ நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *