அடிக்கடி முடியை வெட்டிவிட்டால்தான், அது ஆரோக்கியமாக வளருமா? | Is it true that frequently trimming hair makes it grow healthier?

Spread the love

நான்கு வாரங்களுக்கு ஒருமுறை முடியின் நுனியை மட்டும் ட்ரிம் செய்யலாம். எப்போதுமே, மேலிருந்து, அதாவது வேரிலிருந்துதான் முடி வளரும். அது கீழிருந்து வளர்வதில்லை என்பதை முதலில் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நுனிகள் பலவீனமாக, உடைந்த பிளவுகளுடன் இருப்பதை  “புரோக்கன் எண்ட்ஸ்’ (Broken Ends) என்று சொல்வோம். அப்படி பிளவுபட்டு, உடைந்து போனால், அதை மறுபடி சரிசெய்ய முடியாது.

மண்டைப்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முடியும் ஆரோக்கியமாக இருக்காது. எனவே, கூந்தல் நுனிகளை அவ்வப்போது லேசாக வெட்டிவிடுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

சிலருடைய முடி அமைப்பைப் பார்த்தால், தலையில் அடர்த்தி அதிகமாக இருக்கும். கீழே உள்ள முடியானது குச்சிபோல மெலிந்து இருக்கும். முடியின் நுனிகள் பிளவுபட்டு பாதிக்கப்படுவதுதான் காரணம்.

ஆண்களுக்கு இப்படி முடி பிளவுபடுவது, நுனி வெடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அவர்கள், மாதத்திற்கு ஒருமுறை  சலூன் சென்று முடியை வெட்டிக்கொள்வதால், அவர்களுக்கு முடியின் நுனிகள் வெடிப்பது 99 சதவிகிதம் தவிர்க்கப்படுகிறது.

மிக அரிதாக, அளவுக்கதிகமாக முடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம்.  எனவே, முடியை வெட்டுவதைவிட, நுனியை மட்டும் ட்ரிம் செய்வது ஆரோக்கியமானது. இது  ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *