அடிப்படை உணவு விலை அதிகரிப்பு; சீனா விமர்சனம்

Dinamani2f2025 04 102fhw9369rx2ftnieimport201311253originaleggs.avif.jpeg
Spread the love

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டையின் விலை அதிகரித்தது.

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளையடுத்து, இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன. இவற்றில் முட்டைக் கோழிகள்தான் அதிகம். 30 மில்லியனுக்கும் அதிகமான முட்டைக் கோழிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முட்டையின் விலை அதிகரித்தது.

தற்போது, பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் இல்லாதபோதிலும், முட்டை விலை டஜனுக்கு 6.23 டாலர் (12 முட்டைகளின் விலை இந்திய மதிப்பில் ரூ. 536) விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் அடிப்படையான உணவான முட்டையின் விலையைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் சீனர்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *