‘அடுத்து என்ன?’ முடிவை ஒத்தி வைக்கும் ஓ.பன்னீர்செல்வம்; இது கைக்ககொடுக்குமா?|Will Amit Shah TN visit favour O.Panneerselvam?

Spread the love

தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும் காட்டலாம் என்கிற பன்னீர்செல்வம் எண்ணத்தின் விளைவே இறுதி முடிவு தேதியின் ஒத்திவைப்பு என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

சில மாதங்களாக, ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் நெருக்கம் காட்டி வருகின்றனர். இடையில் செங்கோட்டையனும் இவர்களுடன் இணைந்திருந்தார். ஆனால், அவர் இப்போது தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி.தினகரனும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசிவருகிறார்.

அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

அண்ணாமலை – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இன்னொரு பக்கம், பாஜக ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுதர தயாராக இல்லை என்றே சொல்லலாம். இதற்கு டெல்லியில் ஃபிக்ஸான அமித் ஷா சந்திப்பும், கடந்த வாரம் நடந்த அண்ணாமலை சந்திப்பும்‌ முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருக்கிறார். அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேச உள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது.

“மெகா கூட்டணி’ என்கிற பெயரில் தான் அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியது. ஆனால், அந்தக் கூட்டணியில் அந்த இரு கட்சிகளைத் தவிர வேற எந்தக் கட்சியும் இதுவரை இடம்பெறவில்லை.

தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணியைக் கொண்டு சேர்க்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக நினைக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வதாக இல்லை.

அதனால், ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் பீகார் ஃபார்முலாவைக் கையிலெடுக்கலாம் பாஜக.

அதாவது, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க சொல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரை சேர்த்துகொள்ள நினைக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *