அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்!: கன்ஷ்யாம் பிரசாத்

Dinamani2f2024 09 172f4vmbgv2n2fani 20240917075230.jpg
Spread the love

புதுதில்லி: அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும் இது 2035ல் 446 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் இன்று தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் சுமார் 40 ஜிகாவாட் மின் உற்பத்தி திறன் சேர்க்கப்படும் என்றார். இந்த ஆண்டு உச்ச மின் தேவைக்கான அரசு கணிப்பு சுமார் 260 ஜிகாவாட் ஆக உள்ளது.

இருப்பினும், மழை மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக இலக்கை அடைய முடியவில்லை. இந்த நிலையில், உச்ச மின் தேவை சுமார் 250 ஜிகாவாட் ஆக இருக்கிறது என்று இந்திய மின்துறை நிலைமை குறித்த விவாத அமர்வு 2047 என்ற மாநாட்டில் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்தார்.

மத்திய மின்சார ஆணையம் தொழில் அமைப்பான எஃப் ஐசிசி உடன் இணைந்து இரண்டு நாள் நிகழ்வு (அக்டோபர் 14 மற்றும் 15 தேதி்) ஏற்பாடு செய்யும். இது மின் துறை உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *