அடுத்த பிரதமர்: கெஜ்ரிவாலின் பேச்சால் பதறிய அமித்ஷா

Img Amit
Spread the love

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 50 நாட்களுக்கு பிற்கு அவருக்கு டெல்லி உச்ச நீதி மன்றம் நேற்று(10ந்தேதி) இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அமித் ஷாதான் பிரதமர்

மேலும் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை கோர்ட்டு விதித்து உள்ளது. டெல்லி அரசு நடவடிக்கையில் தலையிடக்கூடாது, ஜுன் 1-ந்தேதி வரை மட்டும் ஜாமீன் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம்செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று(11ந்தேதி) காலை டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “இந்த தேர்தலில் ஒருவேளை பா.ஜனதா வெற்றி பெற்றால் அமித் ஷாதான் பிரதமர் ஆவார்” என கூறி இருந்தார்.

 

பா.ஜனதாவில் மூத்தஅரசியல் கட்சி தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதையும் மோடிக்கு 75 வயது நிரம்புவதையும் குறிப்பிட்டு பேசி இருந்தார்.

மோடி பிரதமராக வருவார்

இது பா.ஜனதா கட்சி தலைவர்கள் இடையேஅதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது நடந்து வரும் தேர் தல் பிரசாரத்தில் பிரதமர்மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கெஜ்ரிவரின் இந்த பேச்சு பரரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் அமித் ஷா கூறியதாவது:-
“நாட்டின் அனைத்து திசைகளிலும் வாழும் நாட்டு மக்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக வருவார்.

 வழிநடத்துவார்

அதனால்தான் அவர்கள் இந்த வகையான தவறான கருத்தைப் பரப்புகிறார்கள். அவர்கள் கூறுவதுபோல், பா.ஜனதாவின் அரசியல் சாசனத்தில் அப்படி எதுவும் இல்லை. 2029 வரை மோடி நாட்டை வழிநடத்துவார். அதோடு, அடுத்து வரக்கூடிய தேர்தல்களையும் மோடி வழிநடத்துவார். இண்டியா கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் இல்லை. இதுபோன்ற பொய்களைப் பரப்பி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறினார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.

கெஜ்ரிவால் ரோடுஷோ

இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ஆம் தேதி வரை மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் 2-ந்தேதி கேஜ்ரிவால், தானாகவே சரண் அடைந்துவிட வேண்டும். ஜாமீன் வழங்கியதை வைத்து தான் குற்றமற்றவர் என நீதிமன்றம் கூறிவிட்டது என்பதாக கெஜ்ரிவால் கருத கூடாது. அப்படி கருதினால் சட்டத்தைப் பற்றிய அவரது புரிதல் பலவீனமானது என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இன்று டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடுஷோ நடத்தினார். இதில் திரளான ஆம்ஆத்மி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *