தமிழகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் அஞ்சலி!
தெற்கு கேரள கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, கிழக்கு திசை காற்றை தமிழக நிலப்பரப்பு வழியாக ஈா்க்கும் என்பதால், டிச.28 முதல் ஜன.2 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களிலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.28,29 தேதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.