அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Dinamani2f2024 082f0eeb46b8 18b3 43ba Be3d 16ef22970cab2fpti08 05 2024 000082b.jpg
Spread the love

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் செப். 2 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிப்பு வெளியாகி இருந்தது.

இதனிடையே, புதன்கிழமை அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் புதன் முதல் சனிக்கிழமை (ஆக.28-31) வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதி, அதையொட்டிய குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *