சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை ஆந்திரத்தை நோக்கிச் சென்றது.
இதையும் படிக்க : அம்பேத்கா் குறித்த அமித் ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.