தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்துள்ளது.
லட்ச தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக இன்று(அக். 9) 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
அதேபோல், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், நீலகிரி, கோவை மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் இன்று(அக். 9) தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.