அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை!

Dinamani2f2024 11 142f6q6m7lnm2frain In Tamilnadu Edi.jpg
Spread the love

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 34 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருவாரூர், நாகை, கடலூர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

கடந்த 2 தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளதால், சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *