அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் செல்ல 5 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு விசா: துணைத் தூதர் தகாஹாஷி முனியோ தகவல் | Takahashi Muneo says visa for 5 lakh Indian youth to travel to Japan in next 5 years

1379703
Spread the love

சென்னை: இந்தோ – ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் ஜப்​பானிய மொழிப் பள்ளி சார்​பில் இந்​திய – ஜப்​பான் 15 கல்​லூரி மாணவர்​கள் இடையே நடை​பெற்ற போட்டிகளுக்​கான பரிசளிப்பு விழா சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. ஜப்​பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, `இந்​து’ என்​.ரவி ஆகியோர் பங்​கேற்று போட்டிகளில் வெற்​றி​பெற்​றவர்​களுக்கு பரிசுகளை வழங்​கினர்.

பின்​னர் ஜப்​பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ கூறிய​தாவது: இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் ஜப்​பானிய பிரதமர் இஷி​பாஷி ஷிகெரு ஆகியோர் சமீபத்தில் நடந்த உச்சி மாநாட்​டில், பொருளா​தார மற்​றும் தொழில்நுட்​பத் துறை​களில் மட்​டுமல்லாமல், மக்​களிடையே​யான பரி​மாற்​றங்​கள், கல்வி மற்​றும் கலாச்​சா​ரம் ஆகிய​வற்​றி​லும் ஒத்​துழைப்பை வலுப்​படுத்து வதற்​கான உறு​திப்​பாட்டை எடுத்​துக்​கொண்​டனர்.

இதன் ஒரு பகு​தி​யாக, இரு நாட்​டுத் தலை​வர்​களும் இந்​தியா – ஜப்​பான் இடையே​யான மனித ஆற்​றல் பரி​மாற்​றம் மற்​றும் ஒத்​துழைப்​புக்​கான செயல் திட்​டத்தை ஏற்​றுக்​கொண்​டனர். அதன்​படி அடுத்த 5 ஆண்​டு​களில் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான இந்​தி​யப் பணி​யாளர்​கள், மாணவர்​களை ஜப்​பானுக்கு அழைத்​துச் செல்ல விசா வழங்​கப்பட உள்​ளது.

குறிப்​பாக இந்​தி​யா​விலிருந்து 50 ஆயிரம் திறமை​யான பணி​யாளர்​கள் மற்​றும் இளம் தொழில் வல்லுநர்​கள் ஜப்​பானுக்கு சென்று அந்நாட்​டின் தொழில் துறை​களில் பணி​யாற்றவும், மேம்​பட்ட தொழில்​நுட்​பத் திறன்​களைப் பெற​வும் வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக `இந்​து’ என்​. ரவி பேசுகை​யில், “ஹிட்​டாச்​சி, சோனி, டொயோட்டா போன்ற ஜப்​பானிய நிறு​வனங்​களும், இந்​தி​யா​வின் யோகா மற்​றும் திரைப்​படங்​களும் இரு நாடு​களின் உறவை நெருக்​க​மாக்​கி​யுள்ள நிலை​யில், பிரதமர் மோடி​யின் சமீபத்​திய ஜப்​பான் பயணம் இரு நாடு​களுக்கு இடையே​யான பொருளா​தார ஒத்​துழைப்பை மேலும் வலுப்​படுத்​தி​யுள்​ளது.

அதன்​படி ஜப்​பான் அடுத்த பத்​தாண்​டு​களில் இந்​தி​யா​வில் ரூ.60 ஆயிரம் கோடியை முதலீடு செய்​யத் திட்​ட​மிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது” என்று தெரி​வித்​தார். இந்​நிகழ்​வில் இந்தோ – ஜப்​பான் தொழில் வர்த்தக சபை தலை​வர் எஸ்​.பத்​ம​நாபன், முன்​னாள் தலை​வர் ஆர்​.சுகுணா ராமமூர்த்​தி, கவுரவ செய​லா​ளர் ஸ்ரீதர் கிருஷ்ண​சாமி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *