அடுத்த 5 நாட்கள் சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு | rain all over Tamil Nadu Weatherman Update

1341118.jpg
Spread the love

சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இதே போல நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரத்தில் (பகுதி அளவில்) மழை நீடிக்கும். புதுச்சேரி மற்றும் கடலூரிலும் கனமழை பொழியும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி தொடங்கியே பரவலாக மழைப்பொழிவு இருக்கிறது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இலங்கைக்கு கீழே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் நகர்வு மிகவும் நிதானமாக இருக்கின்ற காரணத்தாலும், தமிழக கடலோர பகுதியை ஒட்டி இருப்பதாலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மழை இருக்கும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை டிசம்பர் 1-ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு அருகில் கரையை கடந்தால் இந்தப் பகுதிகளில் கனமழை பதிவாகும்.

இந்த மழை மூலம் சென்னையின் நீர் ஆதாரங்கள் பெறுகின்ற மழை நீர் 2025-ம் ஆண்டை சமாளிக்க உதவும். நீர்ப்பிடிப்பு பகுதிகளான பூண்டி, செம்பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் பகுதிகளில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இப்போதைக்கு தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் மழை பொழிவு இருக்காது. கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பொழியும். காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்த பிறகே உட்புற மாவட்டங்களில் மழை இருக்கக்கூடும். தென் தமிழகத்தில் ராமநாதபுரம் வரை மழை இருக்கக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வேகமாக காற்று வீசும் அபாயம் இல்லை. மழை பொழிவு அதிகம் இருக்கும் என்பதே அச்சுறுத்தல். எப்போதும் போல இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை கடக்காது. இருப்பினும் வடக்கு மற்றும் வடகிழக்கு இலங்கையில் மழை பொழிவு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *