அடையாறு முகத்துவாரத்தை அகலப்படுத்துவதற்கான தூர்வாரும் பணியை முதல்வர் மீண்டும் ஆய்வு | Chief Minister again inspects dredging work to widen Adyar estuary

1381086
Spread the love

சென்னை: அடை​யாறு ஆறு கடலில் கலக்​கும் முகத்​து​வாரத்தை தூர்​வாரி அகலப்​படுத்​தும் பணி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மீண்​டும் ஆய்வு செய்​து, போர்க்​கால அடிப்​படை​யில் 2 நாட்​களில் பணி​களை முடிக்க உத்​தர​விட்​டுள்​ளார்.

வடகிழக்கு பரு​வ​மழையை ஒட்டி சென்னை எழில​கத்​தில் உள்ள மாநில அவசர​கால செயல்​பாட்டு மையத்​தில் இருந்து திரு​வாரூர், விருதுநகர், ராம​நாத​புரம், தேனி, கோவை மற்​றும் நீல​கிரி மாவட்​டங்​களில் பெய்​து​ வரும் கனமழை​யால் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் குறித்து முதல்​வர் ஸ்​டா​லின் கடந்த அக்​.19-ம் தேதி ஆய்வு மேற்​கொண்​டார்.

தொடர்ந்து தலை​மைச் செயல​கத்​தில் இருந்து மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர் ஆகிய டெல்டா மாவட்​டங்​களில் ஆய்வு செய்​து, அம்​மாவட்​டங்​களில் நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த கடந்த அக்​.21-ம் தேதி உத்​தர​விட்​டார்.

இதையடுத்து சென்னை சீனி​வாசபுரம் அரு​கில் அடை​யாறு ஆறு கடலில் கலக்​கும் முகத்​து​வாரத்​தில் நடை​பெற்​று​வரும் தூர்​வாரும் பணி​களை கடந்த 24-ம் தேதி பார்​வை​யிட்ட முதல்​வர், முகத்​து​வாரத்தை அகலப்​படுத்​தும் பணி​களை விரைந்து முடிக்​கு​மாறு அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

அதன்​படி படிப்​படி​யாக இயந்​திரங்​களின் எண்​ணிக்கை உயர்த்​தப்​பட்​டு, தற்​போது 14 பொக்​லைன் இயந்​திரங்​கள், 4 ஜேசிபி இயந்​திரங்​களு​டன் அடை​யாறு ஆற்​றின் முகத்​து​வாரப் பகு​தி​யில் மண் திட்​டு​களை அகற்றி அகலப்​படுத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

200 மீட்டர் அகலம்: இந்​நிலை​யில் அடை​யாறு ஆற்​றின் முகத்​து​வாரத்தை தூர்​வாரி அகலப்​படுத்​தும் பணி​களை நேற்று மீண்​டும் முதல்​வர் ஆய்வு செய்​தார். அப்​போது ஏற்​கெனவே முகத்​து​வாரத்தை 150 மீட்​டர் அகலப்​படுத்த அறி​வுறுத்​தி​யிருந்த நிலை​யில், தற்​போது 200 மீட்​டர் அகலத்​துக்கு விரைந்து தூர்​வார அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

தொடர்ந்து தூர்​வாரும் பணி​களை போர்க்​கால அடிப்​படை​யில் விரைந்து மேற்​கொண்டு 2 நாட்​களுக்​குள் பணி​களை நிறைவுசெய்ய உத்​தர​விட்​டார். இதையொட்டி நீர்​வளத்​ துறை மற்​றும் மாநக​ராட்சி அதி​காரி​கள் தொடர்ந்து கண்​காணிப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வும், பணி​களை விரைவுபடுத்த கூடு​தலாக களப் பொறி​யாளர்​களை ஈடு​படுத்​த​வும் அலு​வல​ர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

இத்​துடன் கூவம், முட்​டுக்​காடு, எண்​ணூரில் கொசஸ்​தலை​யாறு ஆகிய பகு​தி​களி​லும் உள்ள முகத்​து​வாரப் பகு​தி​களை​யும் தூர்​வாரி, அகலப்​படுத்த வேண்​டும் என்​றும் அலு​வலர்​களுக்கு உத்​தர​விட்​டார்.

ஆய்​வின்​போது துணை முதல்​வர் உதயநி​தி, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், நீர்​வளத்​துறை செயலர் ஜெ.ஜெய​காந்​தன், தலை​மைப்​பொறி​யாளர் பொதுப்பணி தில​கம், நா.எழிலன் எம்​எல்ஏ, மாநக​ராட்சி தெற்கு வட்​டார துணை ஆணை​யர் அஃதாப் ரஷூல் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *