அடுத்ததாக, நிகழ்ச்சி, கொண்ட்டாம் போன்ற சமயத்தில் நிறைய பேரை சந்திப்போம், பேசுவோம், நிறைய வேலைகள் செய்வோம், பொறுப்பை எடுத்துக்கொள்வோம். அது முடிந்ததும், சலிப்பான அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது சமூகம், குடும்பத்தினர், நண்பர்களுடன் இருந்த இந்த கனெக்ஷன் மிகவும் குறைந்துவிடும். இது போன்ற திடீர் உணர்வு ரீதியான மாற்றம் வரும்போதும், இது ஏற்படலாம்.

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!
நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், நாள்தோறும் சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டும், தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இந்தப் பழக்கங்கள் உடலை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். உடல் ஒழுங்குக்குள் வரும்போது அது உணர்வை ஒழுங்குபடுத்த உதவும். இதைத் தவிர்த்து, சமூகத்துடனான தொடர்பு துண்டிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிமையாக இருக்காமல் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, நண்பர்களை சந்திப்பது, அடுத்த நிகழ்வு, சந்திப்புக்காகத் திட்டமிடுவது போன்றவற்றை செய்யலாம்” என்கிறார் தர்ஷினி மதனகோபால்.
அப்ப தேர்தல் திருவிழா முடிஞ்சதும்…பல பேருக்கு இந்தப் பிரச்னை வரலாம்!