இளம் வீரர்களுக்கான வாய்ப்பு
அணியில் பிரதான வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், அணியில் மூத்த வீரர்கள் பலரும் இல்லாதது ஐசிசி தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற ஐசிசி தொடர்களைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. ஆனால், அழுத்தமான சூழலில் விளையாடிய பல தருணங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியிலிருந்தே மிகவும் கவனமாக விளையாட வேண்டும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, ஆரம்ப போட்டிகளில் சரியாக செயல்படாமல் பின்னர் பிற்பகுதியில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் அவ்வாறு மெதுவாக செயல்பட முடியாது. முதல் போட்டியே காலிறுதிப் போட்டி போன்றது.