அணுசக்தி: ‘தனியாரை அனுமதிக்கும் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு’ – முழு விவரம்!| Nuclear energy: ‘Bill allowing private sector participation: Opposition parties protest’ – Full details!

Spread the love

இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்ததால், 1974-க்குப் பிறகு வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் அளிக்கவில்லை. இது “அணுசக்தி பாகுபாடு” என்று அழைக்கப்பட்டது. அதனால், இந்தியாவால் அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்த முடியவில்லை. 2008-ல் மன்மோகன் சிங்கின் முயற்சியால், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் (Indo-US Nuclear Deal) கையெழுத்தானது.

இதன் மூலம் இந்தியா சர்வதேச அணுசக்தி சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் வாங்க முடியும். 34 ஆண்டுகால பாகுபாட்டை இந்த மசோதா மூலம் உடைக்கும் முயற்சி நடக்கிறது.

மேலும், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க, ‘இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும்’ என்று வாதிட்டு, அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது.

UPA அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அரசை கவிழ்க்க முயன்றது. 2008-ல் அணுசக்தி திட்டத்தை வளர்ப்பது தவறு என வாதிட்ட பா.ஜ.க இன்று, தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் அனுமதி அளிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *