அணை ஓசை: அணையின் தேவையும், காவிரி ஆதாரமும்! மேட்டூர் – சர் ஆர்தர் காட்டன் கனவு | பகுதி 03 | the-story-of-mettur-dam-by-writer-naga-part-three

Spread the love

காவிரியின் பயணம், இந்தியாவின் புவியியல், பண்பாட்டு அடையாளமாகும். குடகுமலையில் சிறிய ஊற்றாக பிறந்து, ஹாரங்கி, ஹேமாவதி, கபினி போன்ற துணை ஆறுகளைச் சேர்த்து, ஒகேனக்கல் வழியாக தமிழ்நாட்டில் நுழைகிறது.

மேட்டூரில் பவானியை இணைத்து, ஈரோடு, மாயனூர், திருச்சி வழியாகப் பாய்ந்து, ஸ்ரீரங்கத்தில் பிரிந்து, கல்லணையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகி டெல்டாவில் பரவி, வங்கக்கடலில் கலக்கிறது.

மொத்தம் 800 கி.மீ நீளத்தில், அதில் 416 கி.மீ தமிழ்நாட்டில் பாயும் காவிரி, “பொன்னி” என அன்போடு அழைக்கப்படுகிறது. மைசூர் மாகாணத்தில் 320 கி.மீ மற்றும் இரு எல்லைகளுக்கும் பொதுவாக 64 கி.மீ என பயணிக்கிறது காவிரி!

இந்த நதி, கோடிக்கணக்கான மக்களுக்கு குடிநீர், விவசாயம், கால்நடை, தொழில் என அனைத்திற்கும் உயிர்க்குருதியாக விளங்குகிறது. ஆண்டுக்கு சராசரியாக 700 மி.மீ. முதல் 2500 மி.மீ. வரை மழைப்பொழிவு பெற்றுக் கொண்டு, தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கிறது.

ஜுன் – செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காலம் ஆண்டின் பெரும் நீர் விநியோகத்தின் ஆதாரமாகும். ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் காவிரியில் பெருவெள்ளம் ஏற்படுகிறது. காவிரியின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 31,334 சதுர மைல்கள் என்ற விரிந்த பகுதியாகும். ( ஒரு மைல் என்பது 1.6 கி.மீ. 1 சதுர மைல் என்பது 2.59 சதுர கி.மீக்கு சமம்).

காவிரியின் கரையில் வாழ்வது, வாழும் போதே சொர்க்கத்தை அனுபவிப்பது போன்றதாக மக்களால் கருதப்படுகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை போல, மேட்டூர் அணையும் மனிதன் – இயற்கை கூட்டுச் சாதனையின் சின்னமாக விளங்குகிறது. நீர் என்பது வெறும் வளம் அல்ல, வரலாறும் நம்பிக்கையும் வாழ்வும் என்பதே உண்மை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *