“அண்ணன் செங்கோட்டையன் அரசியல் அனுபவமும், களப்பணியும் தவெக-வுக்கு உறுதுணையாக இருக்கும்'' – விஜய்

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடன் எழுந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசிவந்த செங்கோட்டையன் தற்போது புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், நவம்பர் 26-ஆம் தேதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யைச் சந்தித்தார்.

K A Sengottaiyan
K A Sengottaiyan

இன்று (நவ 27) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன். இதன்மூலம் தவெக 2026 தேர்தலில் உறுதியான மூன்றாவது அணியாக களமிறங்கும், என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ள விஜய் அதில், “20 வயசு இளைஞராக இருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நம்பி அவங்களுடைய மன்றத்தில் சேர்ந்தவர்.

சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.

இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவங்களுடைய அரசியல் அனுபவமும், களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்று அவங்களையும் அவங்களோடு இணைந்து பணியாற்ற நம்மளோடு கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்.” எனப் பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *