உடனே சமூக ஊடகங்கள்ல செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் போறார்னு செய்தி. ஜெயக்குமாரைப் பொறுத்தவரையில் நேற்று இன்று நாளை ஒரே கட்சிதான்.
செத்தாலும்கூட என் உடல்மீது அ.தி.மு.க கொடியோடுதான் போவேன். யார் வீட்டு முன்னாடியும் காத்திருப்பவன் இந்த ஜெயக்குமார் கிடையாது.
பொதுவாகவே என்னுடைய மனநிலை, புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனா எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அ.தி.மு.க, எலி எந்தெந்த கட்சினு உங்க யூகத்துக்கே விட்டுட்றேன்.

அதனால, புலிக்கு வாலாக இருக்கிறததான் என் வாழ்நாள்ல பெருமையாய் நினைக்றேன். எலிக்கு தலையா இருந்து எந்த பிரயோஜனமும் கிடையாது. எனவே அது நடக்காத விஷயம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்டெடுத்த இயக்கத்தில் இருப்பதுதான் என் வாழ்நாள் பெருமை.
சபாநாயகர் அரியாசனம், அதுக்கப்றம் நிதியமைச்சர்னு 15-க்கும் மேற்பட்ட துறைகள், கட்சியில் தலைமை நிலைய செயலாளர், 3 முறை மாவட்ட செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர்னு இதெல்லாம் எவ்வளவு பெரிய பெருமைகள்.
இந்தப் பெருமையோடு வாழ்நாள் முழுவதும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி புகழ் பாடும் வானம்பாடியாகத்தான் இருப்பேன். யார் வீட்டு கதவையும் தட்டுற ஆள் இந்த ஜெயக்குமார் கிடையாது” என்று கூறினார்.