பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் திமுக தொண்டர்கள் அண்ணாமலை உருவபடத்தின் முன் சாலையில் ஆடு வெட்டிக் கொண்டாடினர்.
இந்த காணொலிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தொண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக பிரமுகர் மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம், சாலையில் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து ஆடு வெட்டியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அதிருப்தி தெரிவித்தது.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.