பேரறிஞர் அண்ணா, ‘மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்’ என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம்.
கொள்கை இல்லைனு சொல்றாங்க. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி.
CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா?
கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே.
‘எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு’ சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
அதுனால ‘பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா’ னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி?” என்று ‘திமுக’ வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.