சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு நேற்று(செப். 13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை மேற்கொண்ட சோதனையில் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் பேரவைத் தலைவா் அப்பாவு நேரில் ஆஜர்!
இதனைத் தொடர்ந்து, மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் மாணவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2 மாதங்களில் 10 வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.