மாணவிக்கு பாராட்டு…: முன்னதாக, பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகாா் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அவரைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை எனவும், குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை. வளாகத்தில் உலவி வருகிறாா். அதை விசாரித்தீா்களா எனவும் கேள்வி எழுப்பினா். பெண்கள் ஆண்களுடன் பேசக் கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்குச் சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது”எனத் தெரிவித்த நீதிபதிகள், பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது; காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் எனவும் சுட்டிக்காட்டினா்.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி
