"அதற்கு நோ சொல்லியிருந்தேன்; ஆனால், 'ஜெயிலர் 2'வில் அதை செய்திருக்கிறேன்; காரணம்…" – விஜய் சேதுபதி

Spread the love

விஜய் சேதுபதி நடித்திருக்கும் சைலண்ட் திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’ இம்மாதம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

மராத்தி சினிமா இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Gandhi Talks - Vijay Sethupathi
Gandhi Talks – Vijay Sethupathi

ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் சேதுபதி தற்போது ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பேட்டியளித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி பேசுகையில், “வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நீங்கள் மிஸ் செய்கிறீர்களா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் மிஸ் செய்யவில்லை. ஏனெனில், நான் இறுதியில் எமோஷனல் ப்ளாக்மெயில் விஷயங்களில் சிக்கிக் கொள்கிறேன்.

அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களை பாதிக்கிறது. பிசினஸையும் பாதிக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அந்த பிசினஸ் விஷயங்களைச் சொல்கிறார்கள்.

அதனால் அதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். எனக்கு பிடிக்கும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்.

நானும் வில்லன் கதாபாத்திரங்களில் என்ஜாய் செய்து நடிப்பேன். அதில் பல சுதந்திரங்களும் இருக்கின்றன. தவறாக நடந்துக் கொள்வதில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

Vijay Sethupathi
Vijay Sethupathi

ஆனால், என்னை அப்படியே வழக்கமான, நான் விரும்பாத வில்லன் கதாபாத்திரங்களில் கொண்டு வர நினைக்கிறார்கள். கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை.

எனக்கு அதில் ஒரு பேலன்ஸ் வேண்டும். ஒரு பக்கம் வில்லன், ஒரு பக்கம் ஹீரோ, ஒரு பக்கம் கேமியோ என கதை கேட்க வேண்டியதாக இருக்கிறது. அவ்வளவு நேரம் என்னிடம் இல்லை. அதனால்தான் நான் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தது போதும் என கூறியிருந்தேன்.

ஆனால், நான் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறேன். ஏனெனில், எனக்கு ரஜினி சாரை அவ்வளவு பிடிக்கும். அவருடன் இருக்கும்போது, பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன்.

பல தசாப்தங்களாக அவர் சினிமாவில் இருக்கிறார். அவருடன் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *