அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

Dinamani2f2024 11 212f0v98hgso2fani 20241121012412.jpg
Spread the love

அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்கில், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திர மாநிலங்களில் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு, சூரிய ஒளி விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்க, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும், குறிப்பிட்ட ஆண்டில், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சியே ஆளுங்கட்சியாக இருந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷூக்கு அமித் மால்வியா பதிலளித்துள்ளார். எனவே, குற்றம்சாட்டுவதற்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் ஆட்சியில் இருந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது என்று மால்வியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், ரமேஷ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் மால்வியா, எப்போதும், ஒரு விவகாரத்தில் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு, விவகாரத்தை முழுமையாக படித்துவிட வேண்டும், அதுபோலவே, அமெரிக்க நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக மூத்த காங்கிரஸ் தலைவர் படித்திருக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்படும்வரை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள்தான் என்றும் பதிலளித்துள்ளார்.

கடந்த 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியிருப்பதாகவும், அதானியின் செயல் சட்டப்படி தவறானது என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கௌதம் அதானி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *