“அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் ‘எல்ஐசி’க்கு பாதிப்பு” – செல்வப்பெருந்தகை | selvaperunthagai said lic affected due to investment on adhani group

1340703.jpg
Spread the love

சென்னை: அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய பாஜக அரசு மறுப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “அமெரிக்காவில் எப்சிபிஏ அமைப்பு அதானி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக வாய் திறக்கவில்லை. ஆந்திரா, ஜம்மு காஷ்மீரில், ஒடிசா மாநிலங்களில் அதானி நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான முதலீடு செய்துள்ளது.

அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு நிதித்துறை உத்தரவிட்டதால் எல்ஐசிக்கு ரூ.8,700 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதானியின் பங்குகளை வாங்க துணை போன செபியின் தலைவரை இதுவரை மத்திய அரசு விசாரணைக்கு அழைக்கவில்லை. செபி தலைவர் மாதவியை பாஜக அரசு ஏன் பாதுகாக்கிறது.

சற்று நேரத்துக்கு முன்பாக கென்யா தலைநகர் நைரோபியில் அதானியின் விமானத்தை சிறை பிடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதானி குழும முறைகேடு குறித்த உண்மை வெளிவந்துவிடும் என்பதால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய பாஜக அரசு மறுக்கிறது. அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எழுப்புவோம். கடந்த அதிமுக ஆட்சியில் அதானியின் கிரீன் எனர்ஜி ராமநாதபுரத்தில் மூதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *