இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்கள் கொடுக்க அதானி முன்வந்தார் என்றும், லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது சட்டப்படி தவறான செயல் எனக் குறிப்பிட்டு நியூயார் நீதிமன்றத்தில் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
லஞ்சம் பெற்றதன் அடிப்படையில் ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமத்துக்கு இந்திய அரசு அதிகாரிகள் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.