அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் சரிந்து முடிந்த பங்குச் சந்தை!

Dinamani2fimport2f20212f32f302foriginal2fcror072721.jpg
Spread the love

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்த நிலையில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

நிஃப்டியில் விப்ரோ, எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ட்ரெண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் நெஸ்லே, ஹெச்யுஎல், டாடா கன்ஸ்யூமர், டைட்டன் கம்பெனி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு 0.8 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.

நுகர்வோர் சாதனங்கள் (0.3%) மற்றும் எஃப்எம்சிஜி (1.5%) தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தது. அதே வேளையில் ரியால்டி, ஐடி மற்றும் பொதுத்துறை வங்கி தலா 2 சதவிகிதம் சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோவின் நிக்கேய் – 225 குறியீடு, தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை சரிந்து முடிந்தது. டோக்கியோவின் நிக்கேய் – 225 குறியீடு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கணிசமாக சரிந்து முடிந்தது.

ஸ்ரீ மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) ஏப்ரல் 10 ஆம் தேதியன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: லேண்ட் ரோவரின் டிஃபெண்டர் ஆக்டா: புதிய மாடல் வெளியீடு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *