நீங்கள் (ஆளும் கட்சியினர்) இந்த நபர்களைத் தயக்கத்துடன் புகழ்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் இந்தியா முந்தைய காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க விரும்புகிறீர்கள்” என்று பேசியிருந்தார்.
மேலும், “உங்களை அரசியல் சட்டமே பாதுகாக்கிறது. பாஜக தொடர்ந்து அரசியல் சட்டத்தை தாக்குகிறது என ஒவ்வொரு ஏழை மனிதரிடமும் நாங்கள் சொல்ல விரும்புகிறோம். நான் சாதிவாரி கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்துவோம் மக்களவையில் வாக்குறுதி அளித்துள்ளேன். அதன் பிறகு இந்தியா ஒரு புதிய வளர்ச்சிபெறும்” என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை சிராக் பஸ்வான் விமர்சித்து கருத்து தெரிவித்தார்.