சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.
தற்போதைய சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையாக இருப்பது வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுதான்.
பவர்பிளேவில் எதிரணி வீரர்களை கலீல் திணறடிக்கும் நிலையில், மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதிக ரன்கள் போவதையும் தடுத்து வருகிறார் நூர்.
இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் நூர் அகமது (12) முதலிடத்திலும் கலீல் அகமது (11) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.