இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.
அதற்காக உயர்மட்ட “அமைதி வாரியம் – Board Of Peace’ என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழு கவனிக்கும்.
இந்த முதல் அமைப்பில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நபர்களும், உலகளாவிய நிதி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.
மேலும், இந்த அமைப்பில் சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.