அதிமுகவின் கூட்டணி சர்க்கஸ்| “Emergency support; BJP’s friendship; unmatched courage! – AIADMK’s alliance circus.”

Spread the love

1998 இல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அதிமுக. அதிமுக -பாஜக கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைத்தது. 96 தேர்தல் முடிந்த இரண்டே ஆண்டுகளில் அதிமுகவுக்கு கிடைத்த ஆதரவு பிரமிக்க வைத்தது. ஆனால், அதிமுக ஆதரவுடன் நடந்த வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 1 வாக்கில் பெரும்பான்மையை தவறவிட்டு ஆட்சி பறிபோனது. வாஜ்பாய் அரசுக்கு எதிராக நின்றது அதிமுக. பாஜக ஆட்சி போக காரணமாக இருந்ததால் காங்கிரஸ் அதிமுகவோடு இன்னும் நெருக்கமானது.

மேலும், திமுக பாஜக கூட்டணிக்குள் சென்றது. இது தமாகாவையும் அதிமுக பக்கமாக நகர்த்தியது. 2001 தேர்தலில் காங்கிரஸ், தமாகா, பாமக, கம்யூனிஸ்ட்டுகள் என பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. அந்த வலுவான கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 132 தொகுதிகளில் அதிமுக வென்றது.

அதிமுக - பாஜக

அதிமுக – பாஜக

இந்த ஆட்சிக் காலத்தில் மதமாற்ற தடைச்சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை என வலதுசாரித்தனத்தோடு சில திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இதனால் பாஜக அதிமுகவோடு இணக்கம் காட்டியது. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேற, அதிமுக பாஜகவோடு சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அத்தனை தொகுதிகளையும் வென்றது. அதிமுகவுக்கு படுதோல்வி.

2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது அதிமுக. இது ஒரு பொருந்தா கூட்டணி. 2001-06 ஆட்சிக்காலத்தில் வைகோவை பொடாவில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தார் ஜெயலலிதா. அதிமுகவை பாசிச அரசு என வைகோ விமர்சித்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் கூட்டணி வைத்தனர். கூட்டணி டேக் ஆப் ஆகவில்லை. திமுக ஆட்சியைப் பிடித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *