“அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடக்கின்றன; ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி” – ஓ.பன்னீர்செல்வம்  | OPS about future of admk

1347558.jpg
Spread the love

திண்டுக்கல்: அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடக்கின்றன. அனைத்தும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஈரோடு இடைதேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. யாருக்கு ஓட்டளிப்போம் என்பது ரகசியம். அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வளர்க்கப்பட்டது.

இன்றைக்கு அதிமுகவின் சக்திகள் பிரிந்து கிடைக்கின்றன. அனைத்து சக்திகளும் இணைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் எதேச்சிகார, அதிகார துஷ்பிரயோகங்கள் நடைபெறும். அதனால் தான் நாங்கள் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை” இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *