எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “உண்மையான உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 1,98,369 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை. திமுக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. 23 தொகுதிகளில் வெறும் 50,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால் அதிமுக வேட்பாளர்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருப்பார்கள்.
கடந்த மக்களவை தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் இல்லை, அதிமுக தரப்பிலிருந்து பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பும் இல்லை, அப்படியிருந்தும் 20.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம். ‘கூட்டணி’ வரும் போகும், ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் நிலையானது. தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக” என்றார்.