அதிமுகவில் இணைந்த ‘ராமநாதபுரம் இளைய மன்னர்’ நாகேந்திரன் சேதுபதி! | Ramanathapuram Nagendra Sethupathi joins AIADMK

1371088
Spread the love

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப் ​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செயலா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயணம் மேற்கொள்கிறார்.

இதன் ஒரு பகுதியாக ஜூலை 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடாணை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், தூத்துக்குடி வடக்கு, விளாத்திகுளம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசும், மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதியின் மகனுமாகிய இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி, இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது மன்னர் குமரன் சேதுபதியின் மனைவியும் ராணியுமாகிய லட்சுமி குமரன் சேதுபதி, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *