“அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் தவெகவில் இணைகிறார்கள்” – செங்கோட்டையன் | “People are joining the TVK not only from the AIADMK but also from the DMK.” – Sengottaiyan

Spread the love

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயர்மட்ட குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் தவெகவில் இணைகிறார்கள். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது. போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *