அதிமுகவும் காங்கிரசும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது ஏன்? – குமுறும் தேவேந்திர குல வேளாளர்கள் | about political parties importance for Devendra Kula velalargal was explained

1350530.jpg
Spread the love

தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்​து​கொண்டு தான் பட்டியல் சமூகத்​தின் 7 உட்பிரிவு களை ஒருங்​கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்​தது.

இதன் தொடர்ச்​சியாக மதுரை பொதுக்​கூட்​டத்​தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்​டுள்​ளது” என்றார். இதைவைத்து தேவேந்திர குல மக்களை பாஜக-வை நோக்​கித் திருப்பும் வேலைகளை சிலர் முன்னெடுத்​தனர்.

அதேசம​யம், மாநிலத்தை ஆளும் திமுக-​வும் பரமக்​குடி​யில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டு​வதாக அறிவித்து பணிகளை துவக்​கியது. சங்கரன்​கோ​வில் பகுதி​யில் மாவீரர் வெண்​ணிக்​காலாடிக்கு வெண்கல சிலை அமைக்​கும் அறிவிப்​பை​யும் வெளி​யிட்​டது.

அண்மை​யில் நடைபெற்ற பாஜக உட்கட்​சித் தேர்​தல்​களில் தென்​காசி, நெல்லை மாவட்ட பாஜக தலைவர்​களாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்​தினர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். திமுக-​விலும் தென்​காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி தேவேந்​திரகுல வேளாளர் சமூகத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், முக்கிய கட்சியான அதிமுக-​வும் தேசியக் கட்சியான காங்​கிரசும் தங்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பதவிகளை வழங்​க​வில்லை என்று தேவேந்திர குல வேளாளர்கள் குறை சொல்​கிறார்​கள்.

2021-ல், தென் மாவட்ட தனித்​தொகு​தி​களான சங்கரன்​கோ​வில், வாசுதேவநல்​லூர், பரமக்​குடி உள்ளிட்ட 10 தொகு​தி​யில் அதிமுக வெற்றி பெற்​றது. இதற்கு தேவேந்திர குல வேளாளர்​களின் வாக்​குகள் அந்தக் கட்சிக்கு உதவின. சங்கரன்​கோ​யில் அதிமுக கோட்​டை​யாகவே கருதப்​படு​கிறது. ஆனாலும் அக்கட்​சி​யில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்​தினர் சொல்​லிக் கொள்​ளும்​படியான முக்கிய பதவி​களில் இல்லை.

17393283662006
சரவணன் காந்தி

இதுபற்றி பேசிய ராமநாத​புரம் மாவட்ட காங்​கிரஸ் பொறுப்​புக்​குழு உறுப்​பினர் சரவணன் காந்தி, “எங்​களது குடும்பமே காங்​கிரஸ் கட்சி​யில் இருக்​கிறோம். ஆனால், இக்கட்​சி​யில் குறிப்​பிட்ட சமூகத்​தினருக்கே முக்கிய பதவிகளை தருகிறார்​கள். எங்களுக்கு மாவட்ட தலைவர் மாதிரியான பதவிகளை தருவ​தில்லை.

திரு​நாவுக்​கரசர் காங்​கிரஸ் தலைவராக இருந்த​போது எங்கள் சமூகத்​தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மாவட்ட தலைவர் பதவி​யில் இருந்​தார். அதன் பிறகு அதுவுமில்லை. தற்போது திருச்சி, திண்​டுக்​கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாத​புரம் உள்ளிட்ட மாவட்​டங்​களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்​தினருக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்கக் கோரி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கை வைத்​துள்ளோம். அவரும் பரிசீலிப்​பதாக கூறி​யுள்​ளார்” என்றார்.

17393283842006
பாஸ்கர் மதுரம்

இதுகுறித்து இன்னும் விரி​வாகப் பேசிய தேவேந்திர குல வேளாளர் கூட்​டமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் வழக்​கறிஞர் எஸ். பாஸ்கர் மதுரம், “எம்​ஜிஆர், அதிமுக-வை உருவாக்​கிய​போது, அக்கட்​சி​யின் முதல் மாநில பொருளாளராக தேவேந்திர குலத்​தைச் சேர்ந்த திருச்சி சவுந்​தர​பாண்​டியன் நியமிக்​கப்​பட்​டார். இப்போது அந்தக் கட்சி​யில் மாவட்டச் செயலாளர் அந்தஸ்​தில்கூட ஒரு தேவேந்​திரர் இல்லை. காங்​கிரஸ் கட்சி​யின் வளர்ச்​சிக்காக பாடு​பட்ட தியாகி இமானுவேல் சேகரன் 1957 சட்டமன்ற தேர்​தலுக்​குப் பிறகு கொலை செய்​யப்​பட்​டார்.

அவரது படுகொலையை பிரச்​சாரம் செய்து 1962 தேர்​தலில் கூடு​தலாக 6 தொகு​தி​களில் வென்றது காங்​கிரஸ். 1989-ல் தனித்து நின்ற காங்​கிரஸ் நெல்லை மாவட்​டத்​தில் நான்கு தொகு​திகளை வென்​றது. அதற்​குக் காரணம், தேவேந்திர குல மக்கள் அளித்த வாக்​கு​கள். எங்கள் சமூகத்​தைச் சேர்ந்த அருணாசலத்​துக்கு மூன்று ​முறை மத்​திய அமைச்​சர் பதவி தந்த ​காங்​கிரஸ், அதன் பிறகு எங்​கள் சமூகத்தை புறந்​தள்​ளி​விட்​டது. இனி​யும் இதே நிலை தொடரு​மா​யின் ​நாங்​களும் அ​தி​முக, ​காங்​கிரஸ் கட்​சிகளை புறந்​தள்ளி வைப்​ப​தைத் தவிர வேறு வழி​யில்​லை” என்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *