'அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பாஜக விரும்பவில்லையா?' – திருமாவளவன் கேள்வி

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், “சிறப்பு தீவிர திருத்தம் மூலம் (SIR) வாக்காளர் பட்டியலில் சீராய்வு செய்வதாக இருந்தால் பிரச்னை இல்லை. இவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருமாவளவன்

சிஏஏ சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்த முடியாததால் இப்படி செய்கிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யக்கூடிய அபாயம் உள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வை தூண்ட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது. செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அவர் கட்சியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கு உகந்ததல்ல. தவெகவில் இணைய வேண்டும் என்பது செங்கோட்டையனின் முடிவு. அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவை நெருக்கடியை நோக்கி தள்ளியதில் பாஜகவின் பங்கு இருக்கிறது.

செங்கோட்டையன் டெல்லி சென்று வந்து, ‘அமித் ஷா என்னை அழைத்தார்’ என்று கூறியிருந்தார். பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதிமுக -பாஜக கூட்டணி கட்சிகளாக உள்ளன. அப்படியிருக்கும்போது செங்கோட்டையன் வெளியேற்றம் எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்கிற கேள்வி எழுகிறது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையே பாஜகவால் இணக்கம் ஏற்படுத்த முடியவில்லையா. எல்லா பிரச்னைகளிலும் தலையிடும் பாஜக இதில் ஏன் வேடிக்கை பார்க்கிறது. அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு பாஜக ஏன் விரும்பவில்லை. இது பாஜகவின் சித்து விளையாடுகளில் ஒன்று.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *