`மதுரை மாநாகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வரி முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்த வேண்டும்” என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மற்றும் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழகத்தில் உள்ள 24 மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சியின் ஊழல் மட்டுமே வெளியே வந்துள்ளது. இந்தியாவிலேயே குப்பை நிறைந்த மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. தேர்தலுக்கு பின்னர் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள், அசுர சக்தியாக உள்ள திமுகவை தோல்வியடைய செய்ய NDA கூட்டணியினர் பாடுபட வேண்டும்” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில் “தமிழகத்தில் மொம்மை ஆட்சி, நிர்வாக திறனற்ற ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் கீழிருந்து மேல் மட்டம் வரை ஊழல், தேர்தலுக்கு பின்னர் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள். திமுகவினர் தங்கத்தை கட்டி,கட்டியாக கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.