அதிமுக: “இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சிக்கும் செல்லலாம்” – ஓபிஎஸ் | “This is a democratic country, anyone can join any party” – OPS

Spread the love

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இயக்கத்தை, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி நிலை நிறுத்தினார்கள்.

அந்த நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதுதான் கழகத்தின் அடிப்படை தொண்டர்களின் எண்ணம் என்பதை டெல்லியில் தெரிவித்திருக்கிறேன்.

நான் எந்தச் சூழலிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை. தவெக-வில் இணைந்திருக்கும் செங்கோட்டையனை நானும் தொடர்புகொள்ளவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை.

என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வு தமிழக மக்கள், கழகத் தொண்டர்கள் எண்ணப்படி இருக்கும். தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஆறு மாதம் இருக்கிறது, பொறுமையாகப் பேசலாம்.

அதிமுக-விலிருந்து பலர் கட்சி மாறுகிறார்கள் என்றால், இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், அதிமுக தொண்டர்களின் பலம் எந்தச் சூழலிலும் பழுதுபடாது.

அதிமுக எத்தனையாகப் பிரிந்திருந்தாலும் எங்கள் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *