அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" – செல்லூர் ராஜு சாடல்!

Spread the love

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘இதே எடப்பாடி பழனிசாமியை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர்தானே அவர்’ எனச் சாடியுள்ளார் ராஜு.

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன்

செங்கோட்டையன் பற்றி செல்லூர் ராஜு, “ஆலமரத்திலிருந்து உதிரும் இலை போலத்தான் செங்கோட்டையன். பழுத்த இலை விழுந்தால் ஆலமரம் கருகியதாக அர்த்தமாகிவிடுமா?

விஜய் போல ஆயிரம்பேர் சொல்லியிருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் நாங்கள் பத்தோடு பதினொன்றாக இருப்போம் என்றா சொல்வார்கள். ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பதாகச் சொன்னால் மட்டும்போதுமா? எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி, சின்னம், அலுவலகம் எல்லாம் இங்கு இருக்கிறது.

விஜய், செங்கோட்டையன்

ஒன்பது தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், பலமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அதைக் கொடுத்தது யார்? செங்கோட்டையனுக்காகவா ஓட்டு போட்டார்கள். இரட்டை இலை சின்னத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தார்கள்.

இதே எடப்பாடியாரை ஆஹா ஓஹோ வெனப் புகழ்ந்தவர் தானே செங்கோட்டையன். இன்றைக்கு ஏதோ ஒரு கோபத்தில் போகலாமா. எந்தக் கட்சியும் வேண்டாம், எந்தப் பதவியும் வேண்டாமென எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர்தான் ரோஷமானவர். அப்படி இருப்பவன்தான் உண்மையான அண்ணா திமுக-காரன்.” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *