அதிமுக எம்எல்ஏ தலைமையில் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல் | AIADMK MLA Leads Door to door Pamphlets Distribution

1370069
Spread the love

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் எம்எல்ஏ மரகதம் தலைமையில், மதுராந்தகம் பகுதியில், வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. மேலும், அங்கு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் ஆகியோர் கலந்து கொண்டு நல்லூர் கிராமத்தில் வீதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தனர்.

இதில் எம்.எல்.ஏ மரகதம் பேசும்போது, ‘ஸ்டாலின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மாதம் மகளிருக்கு ரூ.1,000 கொடுத்துவிட்டு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதே போல் வீட்டு வரி, சொத்து வரி என அனைத்திலும் விலை உயர்வை ஏற்படுத்தி பொதுமக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீண்டும் வழங்குவார்.

இதனைத் தொடர்ந்து வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்க ளை வழங்கி நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் அவலங்களை எடுத்துரைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *