அதிமுக ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்குவதாக சர்ச்சைகள் வெடிப்பு | Controversies are erupting that if the divided AIADMK does not unite, they will start a new party.

Spread the love

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது.

ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இபிஎஸ், ஓபிஎஸ்

இபிஎஸ், ஓபிஎஸ்

இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர்.

இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *