அதிமுக ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சி – எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை | Controversies are erupting that if the divided AIADMK does not unite, they will start a new party.

Spread the love

இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.

தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக.

எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும்.

அந்த வகையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ம் தேதி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக ஒன்றிணைப்பு விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படுமா என்று பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *